புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நீதிபதி கருத்து


புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நீதிபதி கருத்து
x

பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி கூறியுள்ளார்.

மதுரை,

குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த வஹிதா பேகம் என்பவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அலுவலராக, தொலைதூர கல்வி திட்டத்தின் திண்டுக்கல் மையத்தில் நியமிக்கப்பட்டார். திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம், பொதுநியமனத்திற்கு பொருந்தாது என்று கூறி சிறப்பு அலுவலர் நியமனத்தை ரத்து செய்து ஆய்வக பணியாளராக பதவி இறக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் வஹிதா பேகம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இளங்கலை பட்டம் பெற்ற பிறகே முதுகலை பட்டம் பெற வேண்டுமென்ற எந்த வரையறையும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இல்லை என்றும் வேலை வாய்ப்புக்கு தகுதியில்லாத போது, ஏன் இந்த கல்வி முறையை வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்


Next Story