ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம்


ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம்
x

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை வழக்கு விவகாரத்தில் ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைகிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). அவரது சகோதரர் பாதர் ஆகியோரின் குடும்பங்களுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் முருகேசன், பாதரின் மகன் தினேஷ்குமார் மற்றும் சிலரால் தாக்கப்பட்டாா். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் தனியாா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கொலை வழக்குப்பதிந்த ஆயில்பட்டி போலீசாா் தினேஷ்குமாரை கைது செய்தனர். இதனிடையே நிலத்தகராறு காரணமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததாலும், விசாரணை என்ற பேரில் முருகேசனை சம்பவ இடத்திற்கு அழைத்துசென்று விட்டுவிட்டு வந்ததாலும் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரனை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மீதான புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்ட பிறகே, முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story