ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
x

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

ஓடும் பஸ்சில்..

வில்லுக்குறி அருகே காரவிளை பகுதியை சேர்ந்தவர் மாதவதாஸ். இவரது மனைவி அனிதாகுமாரி (வயது 50). இவர் நேற்றுமுன்தினம் காய்கறி வாங்க காரவிளையில் இருந்து வில்லுக்குறி செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். பஸ்சில் பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.

பின்னர் வில்லுக்குறி சந்திப்பில் அனிதாகுமாரி இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அனிதாகுமாரி இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story