3 கோவில்களில் நகை, பணம் கொள்ளை


3 கோவில்களில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்து 3 கோவில்களில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மஆசாமிகள் தப்பி விட்டனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்து 3 கோவில்களில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மஆசாமிகள் தப்பி விட்டனர்.

நள்ளிரவில் கேட்ட மணியோசை

திருவட்டார் அருகே செறுகோல் கோலத்துவிளையில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக மோகனன் என்பவர் உள்ளார்.

கடந்த 18-ந்தேதி வழக்கமான பூஜைகளை முடித்து பூசாரி மோகனன் கோவிலை பூட்டி விட்டு ெசன்றுள்ளார். நேற்று அதிகாலையில் திடீரென கோவிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடி வந்தனர். அப்போது 2 மர்ம ஆசாமிகள் ேகாவிலில் இருந்து இருள் சூழ்ந்த பகுதியில் சென்று பதுங்கினர். இதை கண்ட மக்கள் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

2 பவுன் நகை கொள்ளை

அதே சமயத்தில் கோவிலின் அருகில் மோட்டார் சைக்கிளும், ஒரு ஹெல்ெமட் மற்றும் சில்லறை காசுகளுடன் ஒரு பொட்டலமும் கிடந்தது.

இதையடுத்து கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டும், இரும்பு கம்பி ஒன்றும் அருகில் கிடந்துள்ளது. மேலும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்கத்தாலியும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

திருட்டு மோட்டார் சைக்கிள்

இதுபற்றி கோவில் கமிட்டியை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அளித்தார். அதன் பேரில் விரைந்து வந்தனர்.

மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் விட்டு சென்றது என்பது தெரியவந்தது. இந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது செட்டிச்சார்விளையை சேர்ந்த பென்சிகர் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அந்த மோட்டார் சைக்கிளை அவர் நேற்று முன்தினம் சாமியார்மடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது அது திருட்டு போனதும் தெரியவந்தது.

உண்டியல் பணம்

பென்சிகரின் மோட்டார் சைக்கிளை திருடிய கொள்ளையர்கள் கோவிலில் கைவரிசை காட்டியுள்ளனர். மோட்டார் சைக்கிளை திருடியதும் முதலில் தென்னூர் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு 5 பூட்டுகளை உடைத்தும் நகைகள் எதுவும் கிடைக்காததால் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கோலத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கு உண்டியல் பணத்தை எடுத்து மோட்டார் சைக்கிளை வைத்து விட்டு, அம்மன் நகையை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக கைப்பட்டு மணியடித்ததும், அதைக்கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார்சைக்கிளை எடுக்காமல் நகையுடன் தப்பியோடி உள்ளனர்.

மற்றொரு கோவிலில்...

அங்கிருந்து தப்பிய கொள்ளையர்கள் குட்டக்குழி பகுதியில் பிரின்ஸ் என்பவரின் வீட்டு முன் நின்ற மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர்.

தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் திருவட்டார் அருகே குட்டைக்காட்டில் உள்ள வனசாஸ்தா கோவிலில் உள்ள அம்மன் சன்னதியின் பூட்டை உடைத்து 1½ பவுன் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கேமரா காட்சிகள் ஆய்வு

மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்து அடுத்தடுத்து 3 ேகாவில்களில் 3½ பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story