வீடு புகுந்து நகை திருடியவர் கைது


வீடு புகுந்து நகை திருடியவர் கைது
x

கூடங்குளம் அருகே வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே கூத்தங்குழி பாத்திமா நகரை சேர்ந்தவர் அம்புரோஸ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (வயது 35). இவர் இரவில் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். இதை நோட்டமிட்ட மர்மநபர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்குள் புகுந்து, 3 பவுன் தங்க சங்கிலி, வளையல், மோதிரம், கம்மல், பிரேஸ்லெட் மற்றும் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று உள்ளார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து சரண்யா கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பக்கத்து வீட்டை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் டென்னிஸ் (23), சரண்யாவின் வீட்டில் புகுந்து நகை, பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story