சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த ஜேஷ்டாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த ஜேஷ்டாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி உற்சவமூர்த்தியான‌ பக்தோசிதப் பெருமாள், உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள தங்க கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும். களையப்பட்டு சிலைகளின் தன்மை, கவசத்தின் நிலை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் மூலம் வெள்ளி கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் உற்சவர் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை தங்க கவசம், திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story