ஜே.இ.இ நுழைவுத்தேர்வு: 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு


ஜே.இ.இ நுழைவுத்தேர்வு: 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
x

ஜே.இ.இ. நுழைவுத்தேர் விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது. வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்திற்கும் தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

அதையேற்று தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியியுள்ளார்.


Next Story