ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம்
ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம்
சீர்காழியில் அ.தி.மு.க. சார்பில் நகர ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் பக்கிரிசாமி, அம்சேந்திரன், நகர துணை செயலாளர் பால.பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மணி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சங்கர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்த தி.மு.க. அரசு குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தி.மு.க. அரசை கண்டித்து நகர ஜெயலலிதா பேரவை சார்பில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.