உப்பிலியபுரம் அருகே ஜம்பேரி நிரம்பியது
உப்பிலியபுரம் அருகே ஜம்பேரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி
உப்பிலியபுரம், ஆக.31-
உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம்- வைரிசெட்டிப்பாளையத்தில் ஜம்பேரி உள்ளது. 390 ஏக்கர் பரப்பளவுள்ள ஜம்பேரியில் கரைகள் பலவீனப்பட்டதால் ரூ. 1 கோடியே 34 லட்சத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தன. மராமத்து பணிகளை முன்னிட்டு, ஏரி நீர்மட்டம் உயராமலிருக்க ஏரியிலுள்ள சாமியார் குமுழி, நடு குமுழி, ஊமை குமுழி, கடை குமுழி ஆகிய குமுழிகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இருப்பினும், அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த தண்ணீர் தடுப்பணை வழியாக வெளியேறிவெங்கடாசலபுரம் ஏரி, மாராடி ஏரிகளுக்கு செல்கிறது.
Related Tags :
Next Story