விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம் அடுத்த வாரம் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து


விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்  அடுத்த வாரம் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து
x

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடங்குகிறது. இதையொட்டி அடுத்த வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம்

விழுப்புரம்,

இதுகுறித்து கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாளை (புதன்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களை தவிர்த்து ஏனைய நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. மரக்காணம் தாலுகாவில் நாளை முதல் 7-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் தலைமையிலும்,

மேல்மலையனூர் தாலுகாவில் நாளை முதல் 7-ந் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், செஞ்சி தாலுகாவில் நாளை முதல் 10-ந் தேதி வரை திண்டிவனம் சப்-கலெக்டர் தலைமையிலும், விழுப்புரம் தாலுகாவில் நாளை முதல் 10-ந் தேதி வரை விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையிலும்,

விக்கிரவாண்டி தாலுகாவில் நாளை முதல் 8-ந் தேதி வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், வானூர் தாலுகாவில் நாளை முதல் 8-ந் தேதி வரை செம்மேடு ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் வடிப்பக அலுவலர் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் நாளை முதல் 7-ந் தேதி வரை சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும்,

கண்டாச்சிபுரம் தாலுகாவில் நாளை முதல் 7-ந் தேதி வரை உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும், திண்டிவனம் தாலுகாவில் நாளை முதல் 9-ந் தேதி வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகளை ஜமாபந்தியில் தெரிவித்து பயன்பெறலாம்.

மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து

மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ஜமாபந்தி நடைபெறுவதையொட்டி வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

மீண்டும் 13-ந் தேதியன்று முதல் வழக்கம்போல் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story