நெல்லையில் ஜமாபந்தி தொடங்கியது


நெல்லையில் ஜமாபந்தி தொடங்கியது
x

நெல்லையில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது.

ஜமாபந்தி

வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறும். இந்த ஜமாபந்தி அதிகாரியாக உதவி கலெக்டர் நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

ஒரு தாலுகாவிற்கு கலெக்டர் ஜமாபந்தி அதிகாரியாகவும் நியமிக்கப்படுவார். இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், மானூர், திசையன்விளை, அம்பை ஆகிய தாலுகாக்களில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது.

கலெக்டர்

பாளையங்கோட்டை தாலுகா ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர் கார்த்திகேயன் நேற்று பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் கணக்குகளை சரிபார்த்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் பட்டா மாற்றம், பட்டாவில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன், நில அளவை உதவி இயக்குனர் வாசுதேவன், வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார், வருவாய் ஆய்வாளர் ராஜசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை தாலுகா

நெல்லை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் பட்டா மாற்றம் சம்பந்தமான மனுக்களை கொடுத்தனர். இதில் தாசில்தார் வைகுண்டம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story