ஜமாபந்தி நிகழ்ச்சி
சீர்காழியில் ஜமாபந்தி நிகழ்ச்சி
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் காட்டூர், புளியந்துரை, தாண்டவன்குளம், புதுப்பட்டினம், ஆரப்பள்ளம், பழையபாளையம், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார். அப்போது வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.