அனைத்து வட்டாரங்களிலும் ஜமாபந்தி; இன்று தொடங்குகிறது


அனைத்து வட்டாரங்களிலும் ஜமாபந்தி; இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 13 Jun 2023 12:17 AM IST (Updated: 13 Jun 2023 6:25 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வட்டாரங்களிலும் ஜமாபந்தி இன்று தொடங்குகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாரங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெற உள்ளது. ஜமாபந்தியில் உடையார்பாளையம் வட்டாரத்திற்கு மாவட்ட கலெக்டரும், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலரும், அரியலூர் வட்டாரத்திற்கு அரியலூர் வருவாய் கோட்டாட்சியரும், செந்துறை வட்டாரத்திற்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரும் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ெபற உள்ளனர். உடையார்பாளையம் வட்டாரத்திற்கு ஜெயங்கொண்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் 13, 14, 15, 16, 20-ந் தேதி ஆகிய 5 நாட்களில் மொத்தம் 67 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது. ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று, நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்களில் மொத்தம் 30 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது. அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் 13, 14, 15, 16, 20-ந் தேதி ஆகிய 5 நாட்களில் மொத்தம் 68 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது. செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இன்று, நாளை, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 3 நாட்களில் 28 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது, என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story