கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு
கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 6-ந்தேதி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது. அந்தவகையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் கரூர் மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு நாளான நேற்று திருமாநிலையூர், தோரணக்கல்பட்டி, ஆச்சிமங்கலம், மூக்கணாங்குறிச்சி, காக்காவாடி, புத்தாம்பூர், பாகநத்தம், கே.பிச்சம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனு அளித்தனர். கடந்த 6-ந்தேதி முதல் நேற்று வரை கரூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 433 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 62 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் கரூர் வட்டத்தில் 113 மனுக்களும், அரவக்குறிச்சி வட்டத்தில் 74 மனுக்களும், குளித்தலை வட்டத்தில் 63 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 137 மனுக்களும் என 387 மனுக்கள் பெறப்பட்டன.