அரசடிப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு
அரசடிப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே அரசடிப்பட்டியில் உள்ள மயில்வாகன சுவாமி மற்றும் பொற்பனை முனீஸ்வரர், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு திடலில் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர் துரைக்கண்ணு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காளைகள் வரும் பாதை, செல்லும் பாதை வாடிவாசல் முகப்பு இருபுறங்களிலும் பார்வையாளர்கள் நின்று பார்க்கும் இடங்கள் மற்றும் அருகில் உள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story