கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு


கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு
x

கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் உள்ள கருப்பசாமி, அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்க ஆன்லைன் வழியாக 1,500 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.

500-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். போட்டியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

8 வீரா்கள் காயம்

மாடுபிடி வீரர்களும் ேபாட்டிபோட்டு காளைகளை அடக்கினர். 8 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரங்கள், மின்சார அடுப்புகள், மின்விசிறிகள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் திரளான மக்கள் பார்த்து ரசித்தனர். திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், அருப்புக்கோட்டை உதவி சூப்பிரண்டு கரூண் காரட் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story