தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான கால அளவில் நடைபெறும் - கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான கால அளவில் நடைபெறும் - கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்
x

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான கால அளவில் நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ்பெற்றவை. இதில் முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான வழக்கமான கால அளவில் நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஜல்லக்கட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியானது . இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான வழக்கமான கால அளவில் நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ,காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை , வழக்கமான கால அளவில் நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.


Next Story