அனுமதியின்றி பேனர் அச்சடித்து கொடுத்தாலும் சிறை - கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மட்டுமின்றி, அச்சடித்து கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்,
அனுமதியின்றி பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அத்துடன், ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மட்டுமின்றி, அச்சடித்து கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனுமதியின்றி பேனர் வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story