தமிழக டிஜிபி உத்தரவு: 'போலீஸ்' வாசகம் அகற்றி வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்யும் போலீசார்
போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை போலீசார் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
கோவை:
உச்சநிதிமன்றம் உத்தரவின்படி போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை போலீசார் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட போலீஸ் கண்ட்ரோல் மூலம் மைக்கில் கோவை புறநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை போலீசார் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக்கூடாது.
அப்படி இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு உடனடியாக போட்டோ எடுத்து செல்போன் எண் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு தகவல் தெரிவிக்கவேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.
இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற போர்ட்டு மற்றும் ஸ்டிக்கரை விட்டுவிட்டு போலீசார் தனிப்பட்ட வாகனத்தில் எழுதிய போலீஸ் என்ற எழுத்துக்கள் நீக்கப்பட்டு உடனடியாக போட்டோ எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டனர்.