தமிழ்நாடு நாள் விழாவில் உரையாற்றுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ், தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்குதான். தாழ்ந்துகிடந்த தமிழகத்தைத் தலைநிமிர செய்த நாள் ஜூலை18.
தமிழ்நாடு நாள் விழாவில் உரையாற்றுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. தமிழ்நாடு நாள் விழாவில் நேரில் வந்து பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு என்ற பெயர் சாதாரணமாக கிடைத்ததல்ல. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்தது.
தமிழ்நாடு நாள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களை பாராட்டுகிறேன். தமிழ்நாடு நாள் என சொல்லும் போதே, உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல... ரத்தமும், சதையும் கொண்ட வாழ்க்கை போராட்டம். இந்தியாவின் மொத்த வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம். திமுக ஆட்சியில்தான் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடித்தந்துள்ளோம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது கள்ளக்குறிச்சி வன்முறை வேதனை தருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.
சோகமான சம்பவத்தை பயன்படுத்தி கொண்டு சிலர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானது. பள்ளிகள், ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
திமுக அமைந்த காரணத்தால்தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட முடிந்தது. திமுக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே போயிருக்கும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.