இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் தந்தை-மகனை தாக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்


இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் தந்தை-மகனை தாக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்
x

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனை தாக்கும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் உத்தரவிட்டார் என மதுரை கோர்ட்டில் அவரது டிரைவர் சாட்சியம் அளித்து உள்ளார்.

மதுரை

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பெண் போலீசார் பியூலா, ரேவதி ஆகியோரும், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெண்ணிலா உள்பட பல சாட்சிகள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்துவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு டிரைவராக பணியாற்றிய போலீஸ்காரர் ஜெயசேகர் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விசாரணை குறித்து கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்தன்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் போலீஸ் நிலையத்தில்தான் இருந்தார் என்றும், அன்றைய தினம் அவருக்கு நான் தான் டிரைவராக பணியாற்றினேன் என்றும் ஜெயசேகர் சாட்சியம் அளித்தார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீதரின் தூண்டுதலின் பேரில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கடுமையாக தாக்கினர் என்பதையும் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று ஸ்ரீதர் போலீஸ்நிலையத்தில் தான் இருந்தார் என மற்ற சாட்சிகள் கூறியபோது, எனது டிரைவர் ஜெயசேகர் நான் அங்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துவார் என ஸ்ரீதர் கூறி வந்தார். ஆனால் தற்போது ஸ்ரீதரின் கருத்தை அவரது டிரைவர் ஜெயசேகர் மறுக்கும் வகையில், அவர் போலீஸ் நிலையத்தில் தான் இருந்தார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.


Related Tags :
Next Story