பயிர்களை நாசம் செய்யும்காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பயிர்களை நாசம் செய்யும்காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

சத்தியமங்கலத்தில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுப்பன்றிகளை கொல்ல...

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் டி.வேணுகோபால் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் கே.சுப்பிரமணி, எஸ்.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அரசு அனுமதி இருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. அதனால் விவசாயிகளே காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளிப்பதுடன், துப்பாக்கியும் வழங்கி வனத்துறை பயிற்சி வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் மட்டுமின்றி பயிர்களை நாசம் செய்யும் யானை, மயில், மான், குரங்கு, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறும் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடாத வனத்துறையினர், விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஓட்டு போடுவதில்லை

மேலும் மயில் உள்ளிட்ட பறவை மற்றும் விலங்குகளால் பயிர்கள் சேதமாகும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் வீடுகளில் இனி தேர்தலிலும் ஓட்டு போடுவதில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கோவை மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் நவீன்ராஜ், சத்தியமங்கலம் பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் காராய்ச்சிகொரை வேலுமணி, ஆலம்பாளையம் செல்வராஜ், சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் டி.அப்புசாமி, நாகராஜ், நடராஜ், எம்.கே.ராஜேந்திரன், மோகன்ராஜ் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story