பென்னாகரத்தில் பூர்வ குடி மக்களை வெளியேற்றிய விவகாரம்: வனத்துறை விளக்கம்


பென்னாகரத்தில் பூர்வ குடி மக்களை வெளியேற்றிய விவகாரம்: வனத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 12 May 2024 3:59 AM GMT (Updated: 12 May 2024 5:51 AM GMT)

பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் வனத்துறையால் அகற்றப்பட்டது. இதையடுத்து 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், மாவட்ட கலெக்டர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படியே பூர்வக்குடிமக்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.




Next Story