ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா?
சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சீர்காழி, மார்ச்.23-
சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளுவக்குடி, அகனி, கொண்டல், தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, , கொட்டாயமேடு, அத்தியூர், அகரஎலத்தூர், தேனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினம் தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
24 மணி நேரமும்...
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 24 மணி நேரமும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்தினால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரும் கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் பணியாளர்களோடு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரி்்க்கை விடுத்துள்ளனர்.