சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படுமா?
சாத்தூரில் உள்ள சிறுவர் பூங்காவை முைறயாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூரில் உள்ள சிறுவர் பூங்காவை முைறயாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவர் பூங்கா
சாத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் நல்ல முறையில் பூங்கா பராமரிக்கப்பட்டதாகவும், நாளடைவில் பராமரிப்பு இல்லாததால் பூங்காவில் உள்ள உபகரணங்கள் நாளுக்கு நாள் சேதமடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்னும் தேவையான மற்ற உபகரணங்கள் அமைக்கப்படாததால் பூங்கா தன் பொலிவை இழந்தது. இடைப்பட்ட நேரத்தில் இந்த சிறுவர் பூங்காவை சீரமைத்து புதுப்பொலிவுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.
சீரமைக்க நடவடிக்கை
அந்த பணிகளை மேற்கொள்ளவும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தற்போது வெறும் கம்பிகள் மட்டுமே சிறுவர் பூங்காவில் மிஞ்சி உள்ளன.
இதனால் அப்பகுதியில் பூங்கா இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சிறுவர் பூங்காவினை சீரமைப்பதோடு இன்னும் தேவையான விளையாட்டு உபகரணங்களை அமைத்து புதுப்பொலிவுடன் பூங்கா செயல்பட விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.