பாசன விவசாயிகள் சங்க பெயர் திருத்த பட்டியல் வெளியீடு; கலெக்டர் தகவல்
பாசன விவசாயிகள் சங்க பெயர் திருத்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்புமுறை மேலாண்மை விதிகளின்படி சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட 52 சங்கங்கள் மற்றும் மேல்வைப்பாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட 47 சங்கங்களின் நில உடமையாளர்களின் பட்டியல் படிவம் 5 மற்றும் வாக்காளர்களின் பட்டியல் படிவம்-5ஏ ஆகியவை ஒப்புதல் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலானது தொடர்புடைய பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு பிரிவு அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள், மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் 27.6.2023 முதல் 3.7.2023 வரை பார்வைக்காக வைக்கப்படுகிறது. மேற்காணும் வாக்காளர் பட்டியலில் யாதொரு பெயரையும் சேர்ப்பதற்கு மறுப்புரை இருப்பின் படிவம் 8-ல் உள்ள படிவம் 6-ஐ பெயர் சேர்க்கவும், படிவம் 7-ஐ பெயர் நீக்கவும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு உதவிப்பொறியாளரிடம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.