ராட்சத கிரேனில் உள்ள இரும்பு கொக்கி அறுந்து விழுந்து தொழிலாளி பலி


ராட்சத கிரேனில் உள்ள இரும்பு கொக்கி அறுந்து விழுந்து தொழிலாளி பலி
x

திருவொற்றியூர் அருகே ராட்சத கிரேனில் உள்ள இரும்பு கொக்கி அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

சென்னை

மணலி புதுநகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், திருவொற்றியூர் அருகே சடையங்குப்பத்தில் உள்ள கன்டெய்னர் சரக்கு பெட்டகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை லாரியில் இருந்து கன்டெய்னர் பெட்டியை இறக்குவதற்காக ராட்சத கிரேனில் உள்ள இரும்பு சங்கிலியை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த சங்கிலியில் இருந்த, கன்டெய்னர் பெட்டியை தூக்கும் இரும்பு கொக்கி திடீரென அறுந்து கீழே நின்று கொண்டிருந்த சுரேஷ் தலையில் விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story