ஆத்தூர் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தகைதிகளிடம் பணம் வசூல் புகார்கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


ஆத்தூர் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தகைதிகளிடம் பணம் வசூல் புகார்கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
சேலம்

சேலம்

ஆத்தூர் சிறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கைதிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோத் விசாரணை நடத்தினார்.

புகார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறையில் சமீபத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அங்கு உள்ள கைதிகளிடம் பணம் வசூல் செய்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சேலம் சிறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோத் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அவரிடம் கேட்ட போது கூறியதாவது:-

ஆத்தூர் சிறையில் தற்போது 43 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளிடம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக அரசு செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

கைதிகளிடம் விசாரணை

இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. இது குறித்து கைதிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு கைதியிடமும் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கப்பட்டு உள்ளன. அதன்படி கைதிகளிடம் பணம் ஏதும் வசூல் செய்யவில்லை என்று கூறினார்.


Next Story