தங்க பத்திர முதலீடு திட்டம் அறிமுகம்


தங்க பத்திர முதலீடு திட்டம் அறிமுகம்
x

தபால் நிலையங்களில் தங்க பத்திர முதலீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. அதன்படி 2023-24 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட தங்கப் பத்திர சேமிப்புத் திட்டம் இன்று (11-ந்தேதி) முதல் 15.09.2023 (வெள்ளி) வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு கிராமின் விலை ரூ.5 ஆயிரத்து 923 ஆகும். இதில், ஒருவர் தற்போது ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை முதலீடு செய்யலாம். இதன் மூலம் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு 2.5 சதவீத ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும்.

தங்க பத்திர சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு மற்றும் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தபால்நிலையங்களை அணுக வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story