ராசி என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி என்ஜினீயரிங் கல்லூரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான சர்வதேச கருத்தரங்கு கல்லூரி தலைவர் ரேணுகாதேவி, மற்றும் நிறுவனர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக எம். ஐ.டி. முன்னாள் இயக்குனர் தியாகராஜன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கற்பதோடு நின்றுவிட கூடாது. கற்றதை பயன்படுத்தி மக்களுக்கு பயன்பட கூடிய சாதனங்களை விவசாயம், தூய குடிநீர், மருத்துவம், புதுப்பிக்க வல்ல எரிசக்தி போன்ற துறைகளில் மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உரையாற்றி கருத்தரங்கு மலரை வெளியிட்டார். முன்னதாக கல்லூரி முதல்வர் ரங்கநாத் முத்து வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் இணைய வழியாக ஒக்லோண்ட பல்கலைகழக பேராசிரியர் சுப்ரா கணேசன் சிறப்புரையாற்றினார். எம்.ஐ.டி.கல்லூரி பேராசிரியர் பாப்பா கருத்தரங்கில் கலந்துகொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் கல்வி இயக்குனர் முனைவர் ராஜா, வேலைவாய்ப்பு அலுவலர் கணேசன், கட்டிட என்ஜினீயர் திருஞானசம்பந்தம், துறை தலைவர்கள் முனைவர் தங்கராஜ், முர்த்தி, ஜோசப், விமலன், தினகரன், நிர்வாக அலுவலர் மோசஸ் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முடிவில் கல்லூரி துணை முதல்வர் ரவிகுமார் நன்றி கூறினார்.