சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட ரெயில் நிலையத்தில் இருந்து சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரிடர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வழியாக வருவாய் கோட்ட அலுவலகம் சென்றடைந்தது. ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் 50 பேரும், தீயணைப்புத்துறையை சேர்ந்த 50 வீரர்களும் கலந்துகொண்டனர். இதில் உதவி கலெக்டர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலத்தில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தாசில்தார் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் நன்னிலத்தில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் தொடங்கி வைத்தார். இதில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணன், ரமேஷ், வெற்றியழகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் நன்னிலம் கடைவீதி வழியாக புதிய தாசில்தார் அலுவலகத்தை வந்தடைந்தது. அப்போது அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


Next Story