சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ராட்சத பலூன்


சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ராட்சத பலூன்
x

அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ராட்சத பலூன்

திருவண்ணாமலை

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன்படி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஏ.எஸ்.மோட்டார்ஸ் கட்டிடத்தின் மாடியில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கருணாநிதி சிலை எதிரில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் பாடல் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அருணை மருத்துவக்கல்லூரி இயக்குனர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.

சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு ராட்சத பலூனை பறக்கவிட்டு, அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏ.எஸ். மோட்டார்ஸ் உரிமையாளர் சீனுவாசன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், பொதுக்குழு உறுப்பினர் பிரியாவிஜயரங்கன், மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, நிர்வாகிகள் கலைமணி, ஏ.ஏ.ஆறுமுகம், கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story