விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைபிரிவு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தனர்
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைபிரிவை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ. 5 கோடியே 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பன்முக உயர்தர தீவிர சிகிக்சை பிரிவை தொடங்கி வைத்தனர். அதன் பிறகு அரசு பள்ளியில் படித்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 6 மாணவிகளுக்கு கையடக்க மடிகணினியை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர். விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, சிவக்குமார், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலர் சாந்தி, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், ஸ்ரீராம், நிர்வாக அலுவலர்கள் சிங்காரம், ஆனந்தஜோதி, ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஒன்றியகவுன்சிலர் இளவரசி ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.