புடலங்காய் அறுவடை பணி தீவிரம்
சிங்கனோடை பகுதியில் புடலங்காய் அறுவடை பணி தீவிரம்
திருக்கடையூர்:
தமிழகத்தில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்ததாலும், அதனால் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளதாலும் சிங்கனோடை பகுதிகளில் 10 ஏக்கர் மணல் திடல்களில் விவசாயிகள் புடலங்காய் சாகுபடி செய்து இருந்தனர். தற்போது புடலங்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சிங்கனோடை விவசாயி கூறுகையில், மேற்கண்ட பகுதிகளில் நாங்கள் ஆண்டு தோறும் புடலங்காய் பயிரிட்டு வருகிறோம். இந்த ஆண்டு பயிரிட்டு 45 நாட்கள் முடிந்த நிலையில் தற்போது அறுவடை செய்து வருகின்றோம். பின்னர் அறுவடை செய்த புடலங்காயை உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த புடலங்காய் நார்சத்து மற்றும் மருத்துவ குணம் உடையது. இதனால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு புடலங்காய் பயிர் அதிக அளவில் பயிரிட்டிருந்தோம். பயிர் அதிக அளவில் விளைச்சல் ஏற்பட்டுள்ளதால், ஒரு புடலங்காய் ரூ.15-க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.