Normal
பிளாஸ்டிக் ஒழிப்பு பணி தீவிரம்
நெடும்புலி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி தீவிரம்
ராணிப்பேட்டை
நெமிலி
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து மஞ்சப்பை உபயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊரக, நகர்ப்புறப் பகுதி, தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி, வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள குப்பை கிடங்குகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் மாறன் தலைமையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story