மல்லிகை பூ சாகுபடி தீவிரம்


மல்லிகை பூ சாகுபடி தீவிரம்
x

மல்லிகை பூ சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

அரியலூர்

அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள மல்லூர் கிராமத்தில் 100 ஏக்கருக்கு மேல் மல்லிகை செடிகள் வளர்க்கப்பட்டு, மல்லிகை பூ சாகுபடி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 மாதங்களில் வளரும் இந்த செடிகளில் தற்போது மல்லிகை பூக்கத்தொடங்கி மொட்டுகளாக காட்சியளிக்கிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகளால் அதிகாலையிலேயே மொட்டுகள் பறிக்கப்பட்டு, விற்பனைக்காக அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பண்டிகை, திருமண நாட்களில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்திற்கு மேல் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.


Next Story