ஐஎஸ்ஓ .தரச்சான்றுக்காக ஆரணி போலீஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்
ஆரணி டவுன் போலீஸ் நிலையம் ஐ.எஸ்.ஓ.தரச்சான்றுக்காக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
ஆரணி
ஆரணி டவுன் போலீஸ் நிலையம் ஐ.எஸ்.ஓ.தரச்சான்றுக்காக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் ஐ.எஸ்.ஓ. தரச்சானுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் தலைமையில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
இதனையொட்டி எல்.இ.டி. விளக்குடன் கூடிய முகப்பு பெயர்ப்பலகை, சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்காக தனி அறை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கணினி அலுவலருடன் அனைத்து தகவல்களும் அடங்கிய அறையாகவும், போலீஸ் நிலையத்தில் வரவேற்பாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர் அறை, சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான இருக்கைகள், கைதிகளை அமர வைக்க கம்பியிட்ட அறை, ஓய்வறை, நீதிமன்ற கோப்புகள் அறை, நடைமுறைகோப்புகள் வைக்கும் அறை என பணிகள் நடந்து வருகிறது.
மேலும் புகார் மனு அளிக்க வருபவர்கள் அமர்வதற்கான இருக்கைகள், தரைகளில் டைல்ஸ் கற்கள் அமைத்து ஐ.எஸ்.ஓ. தரச் சான்றுக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது. டவுண் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட அனைத்து போலீசாரின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.