காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு


காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு
x
தினத்தந்தி 16 Oct 2023 12:30 AM IST (Updated: 16 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு நடைபெற்றது.

திருநெல்வேலி

காப்பீட்டு கழக ஊழியர் சங்க 30-வது கோட்ட மாநாடு நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திர நகரில் உள்ள புதிய சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் முத்துகுமாரசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பொன்னையா வரவேற்றார். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

மாநாட்டில் முன்னாள் தலைவர் அமானுல்லாகான், இணை செயலாளர் கிரிஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செலயாளர் ஸ்ரீராம், மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மூத்த தலைவர் வீ.பழனி உள்பட பலர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி காப்பீட்டு கழக ஊழியர் சங்க நெல்லை கோட்ட தலைவராக முத்துக்குமாரசாமி, பொதுச் செயலாளராக பொன்னையா, பொருளாளராக கிருஷ்ணன் மற்றும் 3 துணை தலைவர்கள், 3 இணைச் செயலாளர்கள், உதவிப் பொருளாளர் என மொத்தம் 10 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

மாநாட்டில் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். 3 மற்றும் 4-ம் பிரிவு ஊழியர்களுக்கான புதிய பணி நியமனங்களை ஆயுள் காப்பீட்டு கழக நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story