கொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.23 லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


கொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.23 லட்சம் வழங்க  நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2023 12:30 AM IST (Updated: 31 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று சிவகங்கை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவகங்கை


கொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று சிவகங்கை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலிசி

காரைக்குடியை அடுத்துள்ள அமராவதி புதூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி ரத்னா. பாரதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமராவதி புதூரில் வீடு ஒன்றை வாங்குவதற்காக ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.22 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் இதனுடைய துணை நிறுவனமான இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசி எடுக்கும் படியும், பாரதிக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர் செலுத்த வேண்டிய கடன் தொகையை காப்பீட்டு நிறுவனம் மூலம் செலுத்தப்படும் என்றும், அவருடைய குழந்தைகளுக்கும் தலா ரூ.ஒரு லட்சம் வீதம் கொடுப்பதாக கூறி பாலிசி எடுத்துள்ளார்.

ரூ.23 லட்சம்

இந்த நிலையில் பாரதி கொரோனா தொற்றால் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது மனைவி இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் கொரோனா தொற்றால் இறந்தால் இன்சூரன்ஸ் சட்டத்தில் வராது என்று கூறி பணத்தை தர மறுத்துவிட்டனர். இதுகுறித்து சிவகங்கையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் ரத்னா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிபதி பாலசுப்ரமணியம், உறுப்பினர்கள் குட்வின், சாலமன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர் பாதிக்கப்பட்ட ரத்னாவிற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டு தொகையாக ரூ.23 லட்சத்து 36 ஆயிரத்து 694 வழங்க வேண்டும் என்றும், மேலும் முறையற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடுக்காக ரூ.2 லட்சமும், மன உளைச்சலுக்கு இழுப்பீடாக ரூ.2 லட்சமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் மும்பையில் உள்ள ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான திருச்சியில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story