சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
x

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில ்தற்போது சம்பா நாற்று விடும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்கும்போது அரசினால் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். விவசாயிகள் சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்லதரமான வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும், பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும், பூச்சி நோய் தாக்குதல் குறையும், ஒரே நேரத்தில் அறுவடைக்குவரும், நல்லமகசூல் கிடைக்கும். விவசாயிகள் உண்மை நிலை விதைகளை வாங்கும்போது அது நம் பகுதிக்கு, நம் பருவத்திற்கு ஏற்றதா? என்று பார்த்து வாங்க வேண்டும். விதைகளை வாங்கும் போது அவசியம் விற்பனையாளரிடம் இருந்துபில் கேட்டுப்பெறவேண்டும். பில்லில் காலாவதியாகும் நாள், லாட்நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் வெளி மாநில நெல்ரகங்களை விற்பனை செய்யும்போது பார்ம்-2-ஐ பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அறிவிக்கை செய்யபடாத தனியார் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது பதிவுசான்றிதழ், முளைப்புதிறன் சான்று ஆகியவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இருப்புபதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும். ஆய்வின்போது இவற்றை வைத்திருக்காவிட்டால் விதைச்சட்டபடி விதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story