விழுப்புரத்தில் காலை சிற்றுண்டி உணவின் தரம் குறித்து ஆய்வு - மாணவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட கலெக்டர்
மாணவர்களோடு தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில்,
முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சிற்றுண்டி தயாரிக்கும் உணவு கூடத்திற்கு நேரில் சென்ற அவர், உணவு தயாரிக்கப்படும் முறை மற்றும் உணவு பொருட்களை நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் மாணவர்களோடு தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story