போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வத்தலக்குண்டுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்
சதுர்த்தியை முன்னிட்டு வத்தலக்குண்டுவில் பிரதிஷ்டை செய்யப்படுகிற விநாயகர் சிலைகள், அங்குள்ள காளியம்மன் கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்படுவது வழக்கம். அதன்பிறகு திண்டுக்கல் ரோடு, காந்திநகர், மெயின்ரோடு வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஊர்வலம் செல்லும் பாதையில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story