வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தாா்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கடலூர் வந்தார்.

தொடர்ந்து அவர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மஞ்சக்குப்பம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் மற்றும் நவீன நூலக கட்டிட பணிகளையும், முதுநகரில் சால்ட் ஆபீஸ் ரோடு மற்றும் இருசப்பன் தெரு பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிகாடு ஊராட்சியில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன திறன் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேல்முறையீட்டு மனுக்கள்

அதையடுத்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட கட்டுப்பாட்டு அறையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story