புளியம்பட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


புளியம்பட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவில் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 13 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் போது திருப்பலியும், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் முக்கிய நாளாக கருதப்படும் 5,6,7 ஆகிய தேதிகளில் திருவிழாவிற்கு தூத்துக்குடி, நெல்ைல, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மணியாச்சி துணை சூப்பிரண்டு லோகேஸ்வரனிடம் கேட்டறிந்தார். பின்னர் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story