திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமையும் இடத்தை வருவாய் அலுவலர் ஆய்வு
திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமையும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டம் பொன்னை ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆற்றங்கரையோரம் குவிக்கப்பட்டு வந்ததால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டது
இதனையடுத்து தமிழக அரசு பொன்னை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க ஒப்புதல் வழங்கிய நிலையில் கொண்டாரெட்டிபள்ளி கிராமம் அருகே நிலம் தேர்வு செய்யப்பட்டு வருவாய் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைய உள்ள அரசு நிலத்தை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மேல்பாடி வருவாய் ஆயவாளர் ஐ.சதீஷ்குமார், மேல்பாடி உள்வட்ட நில அளவர் விஜயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story