உடையார்பாளையம் கடைவீதியில் சுகாதார துறையினர் ஆய்வு
உடையார்பாளையம் கடைவீதியில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்டவை குறித்து சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 11 கடைகளுக்கு தலா ரூ.150 மற்றும் கொரோனா தடுப்பு (மாஸ்க் அணியாத) நடவடிக்கை மேற்கொள்ளாத 2 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் வசூல் செய்யப்பட்டது. ஆய்வின் போது துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story