கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
விருதுநகரில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர்,
விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கக்கூடிய யோகா பயிற்சி மற்றும் கணினி பயிற்சி, சட்டப்பூர்வ பயிற்சி, இ-சேவை மையம் தொடர்பான பயிற்சி, பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன. யோகா பயிற்சியினை திருமங்கலத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் சவுமினி தேவி அளித்தார். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான ராஜலெட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story