திருச்சி மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
திருச்சி மத்திய சிறையில் கைதி திடீரென இறந்தார்.
திருச்சி மத்திய சிறையில் கைதி திடீரென இறந்தார்.
கைதி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர் இருளப்பன் என்கிற முருகன் (வயது 56). இவர் விராலிமலை போலீசாரால் தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
கடந்த சில நாட்களாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிஉள்ளார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்கூட்டர் திருட்டு
* திருவானைக்காவல் வடக்கு உத்திர வீதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 40). சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை மர்ம நபர் திருடி சென்றார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. இது குறித்து ஞானபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
* ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக மலைப்பட்டி சேக் மைதீன் காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (42) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மூதாட்டி மீட்பு
*முசிறியில் கடந்த ஒரு மாதமாக சீலா (61) என்ற மூதாட்டி சுற்றித்திரிந்தர். இதை அறிந்த முசிறி போலீசார் அந்த மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மூதாட்டி பசுபதிபாளையம் ஏ.வி.ஆர். நகரைச் சேர்ந்த சகாய தாஸ் என்பவருடைய உறவினர் என்று தெரியவந்தது. இதனையடுத்து சீலாவை அவரிடம் ஒப்படைத்தனர்.