காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
சங்கராபுரம் அருகே காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் கிராமத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மருத்துவ அலுவலர் டாக்டர் சுகன்யா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பாசில் வரவேற்றார். இதில் மருத்துவக்குழுவினர் பங்கேற்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கொசு மற்றும் நீரினால் பரவக்கூடிய நோய்கள் குறித்தும், அந்த நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் சுகாதார செவிலியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story