வீச்சரிவாளை சுழற்றியபடி கிராமத்தில் புகுந்து மிரட்டியமர்மநபர்கள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையம் எதிரில் ெபாதுமக்கள் மறியல்


வீச்சரிவாளை சுழற்றியபடி கிராமத்தில் புகுந்து  மிரட்டியமர்மநபர்கள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையம் எதிரில் ெபாதுமக்கள் மறியல்
x

கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோவில் திருவிழாவின்போது வீச்சரிவாளை சுழற்றியபடி 2 பேர் ஊருக்குள் புகுந்ததை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாைலமறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோவில் திருவிழாவின்போது வீச்சரிவாளை சுழற்றியபடி 2 பேர் ஊருக்குள் புகுந்ததை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல் சாைலமறியலில் ஈடுபட்டனர்.

கெங்கையம்மன் கோவில் திருவிழா

கே.வி.குப்பம் தாலுகா, சென்னங்குப்பத்தில் ெகங்கை அம்மன் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி அம்மன் கண் திறப்பு, அன்னதானம் வழங்குதல், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கூழ் வார்த்தல், கும்ப சோறு படைத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.

இரவு கிராமத்தில் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிகர்கள் விரும்பும் பாடல்களை பாடச் சொல்லி தொல்லை கொடுத்ததால் ஆடல் பாடல் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீச்சரிவாளைச் சுழற்றியபடி அச்சுறுத்தும் தோரணையுடன் மிரட்டும் வகையில் ஊருக்குள் சுற்றித் திரிந்தனர். இதனால், ஊர்மக்கள் பயந்தபடி பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். வீச்சரிவாளுடன் சுற்றியவர்களைப் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

அதன்பிறகும் அந்த வாலிபர்கள் மீண்டும் வீச்சரிவாளுடன் ஊருக்குள் சுற்றித் திரிந்தனர்.

மறியல்

இதுகுறித்து ஊர்மக்கள் சார்பில் நேற்று 25-ந் தேதி கே.வி.குப்பம் போலீசில் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்தனர். இதை போலீசார் வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் கே.‌வி.குப்பம் போலீஸ் நிலையம் எதிரில் காட்பாடி - குடியாத்தம் நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் சுமார் 50 பேர் தார்ச் சாலையில் அமர்ந்து ஊராருக்குப் பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் கோஷம் எழுப்பினர்.

அப்போது சாலையின் இரண்டு புறங்களிலும் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலில் ஈடுபட்டவர்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து புகார் மனுவைப் போலீசார் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.



Next Story